கொழும்பு புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 83 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணியாற்றிய 70 வயதுடைய ப…

கொழும்பு புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 83 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணியாற்றிய 70 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைஇவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விசாரணைகளில் தெரியவந்ததாவது, சந்தேகநபர் டுபாயில் 15 ஆண்டுகளும், குவைத்தில் 3 ஆண்டுகளும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். கடந்த 6 ஆண்டுகளாக பொரலஸ்கமுவ வீட்டில் பணியாற்றி வந்த இவர், வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு சென்றிருந்த காலங்களை பயன்படுத்தி தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை தொடர்ச்சியாக திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 45 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களின் ஒரு பகுதியும், 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபா வெளிநாட்டு பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், திருடப்பட்ட நகைகளின் ஒரு பகுதி உருக்கப்பட்டு, குருணாகல் பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.