வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனத்த கடற்கரைப் பகுதியில், திங்கட்கிழமை (30) மாலை இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வில்பத்து தேசிய பூங்கா அதிகாரிகளின் வழக்கமான ரோந்துப் பணியின் போதே, இந்த டால்பின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள…

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனத்த கடற்கரைப் பகுதியில், திங்கட்கிழமை (30) மாலை இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வில்பத்து தேசிய பூங்கா அதிகாரிகளின் வழக்கமான ரோந்துப் பணியின் போதே, இந்த டால்பின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, அந்த டால்பின் மீன்பிடி வலையில் சிக்கியதற்கான காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து எலுவன்குளம் வனவிலங்கு சரணாலயத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வில்பத்துவில் கரை ஒதுங்கிய டால்பின்