களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் களுத்துறை, தூவ விகாரை வீதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை…

களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் களுத்துறை, தூவ விகாரை வீதியைச் சேர்ந்த    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர்.  பேருந்து சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் திருட்டு

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, கட்டுகுருந்தைச் சந்தையில் நிறுத்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, சிகிச்சைக்காகக் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பாயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியிருந்தார். அவர் பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து நடந்த தருணத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர், பேருந்து சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை திருடிச் சென்ற சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் பஸ்ஸில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்து மற்றும் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.