பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்கு, நாளை (29) காலை வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிப்புகளை கவனிக்குமாறும் அற…
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (28) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்கு, நாளை (29) காலை வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிப்புகளை கவனிக்குமாறும் அறிவுறுத்தல்
அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கும் என்றும், கடல் பகுதிகள் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், சிலாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் மட்டம் சுமார் 2.0 - 3.0 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் கடல் சமூகத்தினர் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால அறிவிப்புகளைக் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

