யாழ்ப்பாண மறைமாவட்ட புதிய ஆயராக ஆயர் அன்ரன் ரஞ்சித் (Antony Ranjith Pillainayagam) வத்திக்கானால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார்.திருத்தந்தை லியோதிருத்தந்தை பிரா…

யாழ்ப்பாண மறைமாவட்ட புதிய ஆயராக ஆயர் அன்ரன் ரஞ்சித் (Antony Ranjith Pillainayagam) வத்திக்கானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார்.திருத்தந்தை லியோதிருத்தந்தை பிரான்சிஸால் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக ஜூலை 2020இல் நியமிக்கப்பட்டார். மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் ஓய்வுக்குப் பின்னர் அங்கு அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பொறுப்பேற்றார். கொழும்பு இறையியல் கல்லூரியில் தமிழ் பிரிவுக்கு பொறுப்பாளராகவும், கொழும்பிலுள்ள பிரபல கல்லூரிகளில் (சென். பீற்றர்ஸ், சென். ஜோசப், சென். செபஸ்டியன்) ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையில் தேசிய கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.இந்த சூழ்நிலையில் திருத்தந்தை லியோவினால் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ் மறைமாவட்டத்தின் இணை பேராலயத்தின் ஆலயத்தின் மணி ஒலிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.