யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸாரை கண்டு, வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர். நீண்ட தூரம் துரத்தி சென்ற பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாவகச்சேர…
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸாரை கண்டு, வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர்.
நீண்ட தூரம் துரத்தி சென்ற பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்த வேளை, பொலிசாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்துள்ளது. உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார் அதனை பொலிஸார் துரத்தி சென்ற வேளை , பொலிஸார் தம்மை பின் தொடர்வதை தடுக்கும் நோக்குடன் , வீதியில் மண்ணை பறித்த வண்ணம் உழவு இயந்திரத்தில் தப்பி சென்றுள்ளனர். பொலிஸாரும் நீண்ட தூரம் உழவு இயந்திரத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில் , வீதியில் உழவு இயந்திரத்தை கைவிட்டு , அதன் சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் , அதன் சாரதியையும் , அதில் பயணித்த நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

