தியத்தலாவையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியின் யல்பத்வெல பகுதியில் இன்று (27) மாலை விபத்துக்குள்ளானது.குறித்த பேருந்து முதலில் கெப் (Cab) ரக வாகனமொன்றுடன் மோதியதையடுத்து, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்…

தியத்தலாவையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியின் யல்பத்வெல பகுதியில் இன்று (27) மாலை விபத்துக்குள்ளானது.குறித்த பேருந்து முதலில் கெப் (Cab) ரக வாகனமொன்றுடன் மோதியதையடுத்து, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பாரவூர்திகளிலும் பின்னர் மின்சாரக் கம்பம் ஒன்றிலும் மோதி நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்து உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.