ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மகன் கசுன் திஸாநாயக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது என்பதை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முடியாமல் போயுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம…

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மகன் கசுன் திஸாநாயக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைவதற்கு எப்படி வாய்ப்புக் கிடைத்தது என்பதை விசாரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முடியாமல் போயுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பல்வேறு விவகாரங்களை கையிலெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.அரசாங்கத்தின் அராஜக செயல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கடற்படையில் இணைந்ததில் உள்ள தவறை மட்டும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தேடிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய மகன் கசுன் திஸாநாயக்க எவ்வித தகுதிப் பரீட்சைகளும் இன்றி மிஹின் லங்கா நிறுவனத்திற்குள் நுழைந்தார். பின்னர், மிஹின் லங்கா நிறுவனம் மூடப்படும் போது, கசுன் திஸாநாயக்கவிற்கு மாத்திரம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணையும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது.

இது குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆராயத் தேவையில்லாமல் போயுள்ளது.

எதிர்பாராத விதமாக வந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, ஜனநாயகத்தையும் சமூக ஒழுக்கங்களையும் குழிதோண்டிப் புதைத்து, எந்தவொரு கீழ்த்தரமான வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசாங்கத்தின் இந்த அராஜக செயற்பாடுகளை நிரூபிக்க இந்நாட்டின் ஜனநாயக சக்திகள் தயாராக இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.