நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தால் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, கைதிகள், சிறையில் உள்ள தொலைக்காட்சி அமைப்பு, மருந்துக் களஞ்சியம், உடல் ஸ்கேனர், சிசிடிவி அமைப்பு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தால் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, கைதிகள், சிறையில் உள்ள தொலைக்காட்சி அமைப்பு, மருந்துக் களஞ்சியம், உடல் ஸ்கேனர், சிசிடிவி அமைப்பு, அலுவலகங்கள் மற்றும் பிரதான களஞ்சியம் உள்ளிட்ட பல இடங்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
10 கோடிக்கும் அதிகமான இழப்பு சீசிடிவியின் கேமராக்கள் மட்டுமன்றி அதன் பதிவுக் களஞ்சியமான கருவியும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தற்போதைக்கு உத்தேச மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முழுமையாக அகற்றப்பட்டு, பூரண ஆய்வொன்றின் பின்னரே சிறைச்சாலை சேதங்கள் தொடர்பில் துல்லியமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

