எப்பாவல நகரில் கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் 14 வயதுடைய இரு மாணவர்கள் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள், கைரேகை ஆய்வு, அதிகார…

எப்பாவல நகரில் கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் 14 வயதுடைய இரு மாணவர்கள் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள், கைரேகை ஆய்வு, அதிகாரப்பூர்வ மோப்ப நாய் மற்றும் திருடப்பட்ட கைபேசிகளின் IMEI எண்கள், தொலைபேசி சமிக்ஞைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கைபேசிகளின் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாகும். திருடப்பட்ட கைபேசிகளில் இரண்டை சந்தேகநபர்கள் தங்களது பயன்பாட்டிற்காக வைத்துக்கொண்டதுடன், ஏனையவற்றை ஒரு தேரருக்கும், அவரது தந்தைக்கும் மற்றும் பல மாணவர்களுக்கும் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணைய விளையாட்டுக்கு அடிமையானதே இந்தத் திருட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று (18.07.2026) தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.