Colombo (News 1st) 11 மாவட்டங்களில் இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த 11 மாவட்டங்களின் 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பதில் பண…
Colombo (News 1st) 11 மாவட்டங்களில் இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த 11 மாவட்டங்களின் 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.இந்த வேலைத்திட்டம் 07 நாட்களுக்கு கிராம உத்தியோத்தர் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.சுகாதார பிரிவு உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர், இராணுவ உறுப்பினர் மற்றும் சுகாதார துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட 10 குழுக்கள் இந்த வேலைத்திட்டதில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.நாளாந்தம் நோயாளர்கள் பதிவாகின்றமை மற்றும் நுளம்புக்கடி ஆகியவற்றைக் குறைப்பதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் புகை மூட்டும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,235 ஆக பதிவாகியுள்ளது.அத்துடன் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.நாட்டின் 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

-557397_850x460.jpg)