மத்திய மாகாண பாடசாலைகளின் 11 ஆம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழிப் பாட வினாத்தாளானது, 2019 ஆம் ஆண்டு வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளின் பிரதியா என்பது குறித்து கண்டறிய, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 11 ஆம் தரத்த…

மத்திய மாகாண பாடசாலைகளின் 11 ஆம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழிப் பாட வினாத்தாளானது, 2019 ஆம் ஆண்டு வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளின் பிரதியா என்பது குறித்து கண்டறிய, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

11 ஆம் தரத்திற்கான இரண்டாம் தவணைப் பரீட்சை செவ்வாய்க்கிழமை (14) அன்று நடைபெற்ற போதே இந்த சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, இரண்டாம் தவணைப் பரீட்சையின் தமிழ் மொழி வினாத்தாளில் 24 ஆம் இலக்கம் முதல் உள்ள அனைத்து வினாக்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வினாத்தாள்களில் உள்ள அனைத்து வினாக்களும் 2019 ஆம் ஆண்டு வட மாகாண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றவை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியதுடன், இது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த வினாத்தாளையும், 2019 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் வழங்கப்பட்ட வினாத்தாளையும் ஒப்பிட்டுப் பார்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இது குறித்து வினவிய போது மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மத்திய மாகாண பாடசாலைகளின் 11 ஆம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழிப் பாட வினாத்தாளானது, 2019 ஆம் ஆண்டு வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளின் பிரதியா என்பது குறித்து கண்டறிய, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

11 ஆம் தரத்திற்கான இரண்டாம் தவணைப் பரீட்சை செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற போதே இந்தச் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, இரண்டாம் தவணைப் பரீட்சையின் தமிழ் மொழி வினாத்தாளில் 24 ஆம் இலக்கம் முதல் உள்ள அனைத்து வினாக்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வினாத்தாள்களில் உள்ள அனைத்து வினாக்களும் 2019 ஆம் ஆண்டு வட மாகாண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றவை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அவர் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த வினாத்தாள் குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி கூறுகையில், “2019 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் பயன்படுத்தப்பட்ட வினாத்தாளைப் பெற்று, தற்போதைய வினாத்தாளோடு ஒப்பிட்டுப் பார்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.