இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 18ஆம் திகதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சி…

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 18ஆம் திகதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சிறுமியை, அதன் சாரதி கடத்திச் சென்று ஹோட்டல் ஒன்றில் ஒப்படைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஐந்து நாட்களில் நான்கு வெவ்வேறு ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமி, கட்டாயப்படுத்தி மதுபானம் அருந்தச் செய்யப்பட்டதுடன், 32 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22ஆம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய சிலரை ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாக்கியதாகவும், சட்டத்தை தனிநபர்கள் கையில் எடுப்பது தவறானது என்றும், அது விசாரணைகளை பாதிக்கக்கூடும் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.