Colombo (News 1st) 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.நோயாளர்கள் பதிவாவதில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் இந்த ஆ…

Colombo (News 1st) 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.நோயாளர்கள் பதிவாவதில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 50 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நோயாளர்களின் எண்ணிக்கையும் 73,455 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.டெங்கு அதிக அபாயமுள்ள 11 மாவட்டங்களில் உள்ள 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.