வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக அமைதி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று(17.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் போராட்டம்பலாலி - மயிலிட்டியை…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக அமைதி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று(17.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் போராட்டம்பலாலி - மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அந்தப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத காரணத்தினால், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது..இந்த நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.இதன் அடிப்படையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.