உலகக் கிண்ண இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், கொலம்பியாவை பெனால்டியில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 1954ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 72 ஆண்டுகள் கழித்து சுவிட்சர்லாந்து முதன்முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.…
உலகக் கிண்ண இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், கொலம்பியாவை பெனால்டியில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 1954ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 72 ஆண்டுகள் கழித்து சுவிட்சர்லாந்து முதன்முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வழக்கமான 90 நிமிட ஆட்டம் மற்றும் கூடுதல் 30 நிமிட கூடுதல் நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் போட்டி 0-0 என சமநிலையில் முடிந்தது.
பெனால்டி திருப்பங்கள்:
கொலம்பியா அணியின் டேவின்சன் சஞ்செஸ் அடித்த பந்து கம்பியில் பட்டு வீணாகியது.
அடுத்து வந்த குச்சோ ஹெர்னாண்டஸின் பெனால்டி வாய்ப்பை சுவிஸ் கோல் காப்பாளர் கிரிகோர் கோபெல் மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார்.
சுவிட்சர்லாந்தின் மனுவல் அகஞ்சி பெனால்டியை தவறவிட்ட போதிலும், இறுதி வாய்ப்பில் களமிறங்கிய ரூபன் வர்காஸ் (பதற்றமின்றி பந்தை கோலாக மாற்றி சுவிஸ் அணியின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.
தொடர்ச்சியாக ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்று, கடந்த 2006, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய அனைத்துத் தொடர்களிலும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றோடு வெளியேறிய சுவிட்சர்லாந்து, இறுதியாக அந்த சாபத்தை உடைத்துள்ளது. காலிறுதியில் சுவிட்சர்லாந்த, நடப்பு சம்பியனான லியனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது.

