2022ஆம் ஆண்டு நெருக்கடியின் போது நாட்டைத் தனியாகப் பொறுப்பேற்க ஒருபோதும் தயாராகவில்லை, ஆனால் அது எனது பொறுப்பு என்பதால் பொறுபேற்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

2022ஆம் ஆண்டு நெருக்கடியின் போது நாட்டைத் தனியாகப் பொறுப்பேற்க ஒருபோதும் தயாராகவில்லை, ஆனால் அது எனது பொறுப்பு என்பதால் பொறுபேற்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாரும் முன்வரவில்லை..

கடந்த 2022ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ச ஆட்சி மக்களால் கவிழ்க்கப்பட்ட பொழுது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்று பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“அந்த காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க நான் முதல் தேர்வாக இருக்கவில்லை. வேறு யாரும் அதைச் செய்ய முன்வராததால் நான் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. நான் நான்காவது தேர்வாக இருந்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.