லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தளர்த்தியுள்ளது. இந்த அதிரடி முடிவின் மூலம், சில குழுப் போட்டிகளிலும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டி…
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தளர்த்தியுள்ளது.
இந்த அதிரடி முடிவின் மூலம், சில குழுப் போட்டிகளிலும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச ஒலிம்பிக் குழு இருப்பினும், இந்த தளர்வுகளுக்கு மத்தியிலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிகழ்வுகளில் ரஷ்ய நாட்டின் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்கும், அந்த நாட்டின் தேசிய கீதத்தை இசைப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை தற்போதைக்குத் தொடரும் என ஐஓசி (IOC) தெளிவுபடுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருந்த பின்னணியில், இந்த புதிய அறிவிப்பு அவர்கள் மீண்டும் சர்வதேச அரங்கிற்குள் நுழைவதற்கான ஒரு பகுதி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

