ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் புதிய அரசை…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.புதிய தலைமுறை அரசியல்
நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, "கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான்.தற்போதைய அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர்.வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க நாங்கள் தயாராகவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை மோதல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் குறிப்பிடுகையில்,
"அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில் எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை.சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை. 2029 இல் நாட்டின் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.வரி செலுத்துதல்
இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தனது உரையில், "மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்பட்ட கோட்டே, இன்று முறையற்ற நிர்வாகத்தாலும், டெங்கு அபாயத்தாலும் சீரழிந்து போயுள்ளது.மக்கள் வரி செலுத்துவது சுகாதாரமான சூழலைப் பெறுவதற்காகவே தவிர, அபராதம் கட்டுவதற்காக அல்ல. அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்" என கவலை வெளியிட்டுள்ளார்.
இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர,
"நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும் நாமல் ராஜபக்சவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில் மிலிந்த ராஜபக்சவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்துள்ளோம்" என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

