மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்த…
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்குஇ வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

