ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த குழந்தை தனது தாயிடம் கூறிய நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், கிராம பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டுள்ளனர்.மது விருந்த…

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அந்த குழந்தை தனது தாயிடம் கூறிய நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், கிராம பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டுள்ளனர்.மது விருந்து  ஆனால் பஞ்சாயத்தை சேர்ந்த சில நபர்கள், இந்த விவகாரத்தை காவல்துறை வரை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், சந்தேகநபருக்கு அபராதம் விதித்து பிரச்சினையை இங்கேயே தீர்த்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதனை கிராம பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன்படி குற்றவாளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் 20,000 பணத்தை உடனடியாக செலுத்திய அவர், மீதம் உள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.அவர் கொடுத்த 20,000 ரூபாய்பணத்தில் கிராமத்தினர் சிலர் மதுபானங்களையும், அசைவ உணவுகளையும் வாங்கி வந்து விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அறிந்து பொலிஸார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மது விருந்து படுஜோராக நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடம் நேரடியாக புகாரைப் பெற்ற பொலிஸார், அந்த புகாரின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.