உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், ஹைப்ரிட்-மின்சார (Hybrid-Electric) இயக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விமானத்தை 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சோதனைக்காக மாற்றியமைக்கப்பட்ட சாப் 34…

உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், ஹைப்ரிட்-மின்சார (Hybrid-Electric) இயக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விமானத்தை 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த சோதனைக்காக மாற்றியமைக்கப்பட்ட சாப் 340 (Saab 340) வகை விமானம் பயன்படுத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய ஜெட் எஞ்சினுடன் மின்சார இயக்க அமைப்பை இணைக்கும் இந்த ஹைப்ரிட் தொழில்நுட்பம், எரிபொருள் நுகர்வைக் குறைப்பதோடு, கார்பன் மற்றும் பிற பசுமைக்குடில் வாயு உமிழ்வுகளையும் கணிசமாகக் குறைக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

எதிர்காலத்தில் குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்ட வர்த்தக விமானங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு இந்த வெற்றிகரமான சோதனை முக்கிய ஊக்கமாக அமையும் என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் புதிய முன்னேற்றமாக இது பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.