ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம…

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: கடந்த ஜூன் 18-ஆம் தேதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சிறுமியை, ஓட்டுநர் கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார். ஜூன் 22-ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்படும் வரை, அந்த ஐந்து நாட்களுக்குள் நான்கு வெவ்வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு, சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தை வெளியே கேட்க விடாமல் தடுக்க, அவருக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் புகட்டப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மீட்கப்பட்ட சிறுமிக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இச்செய்தி அப்பகுதி மக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.