பெண்ணொருவரைப் படுகொலை செய்தமை மற்றும் இருவருக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட எட்டு பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல மரண தண்டனை விதித்து புதன்கிழமை (08) அன்று தீர்ப்பளித்தார். 33 ஆண்டுகளுக்கு முன்பு இந…
பெண்ணொருவரைப் படுகொலை செய்தமை மற்றும் இருவருக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட எட்டு பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல மரண தண்டனை விதித்து புதன்கிழமை (08) அன்று தீர்ப்பளித்தார்.
33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குற்றத்தைச் செய்தவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை, முறைப்பாட்டாளர் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிபதி, ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியிலும் நேரத்திலும், வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து இவர்களைத் தூக்கிலிடவும் உத்தரவிட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்: பி. ஏ. கே. நிஷாந்த குமார, ரிகார்டி மோசஸ், ரோஹன் ஜனக சம்பத் சாகர, அனில் இந்திரஜித், கனகராஜா டிரோன், சோமரத்ன சில்வா, ஹிக்கடுவ லியனகே நிஹால் மற்றும் கே. டபிள்யூ. அஜித் குலதுங்க ஆகியோர் ஆவர்.

