வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்று (19) ஐந்தாவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 36 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளை இழந்து வாழ்ந்து வரும் மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டி…
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்று (19) ஐந்தாவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 36 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளை இழந்து வாழ்ந்து வரும் மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.தொடரும் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது காணிகளில் தற்போது இராணுவம் விவசாய நடவடிக்கைகளையும் வர்த்தக நிலையங்களையும் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.அதேவேளை, உண்மையான உரிமையாளர்களான தாங்கள் நீண்ட காலமாக வீடுகளும் காணிகளும் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
எனவே, தங்களது காணிகளையும் வீடுகளையும் உடனடியாக விடுவித்து மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

