இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' (SLNS Thammanna) பிரிவினரால், தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக…
இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' (SLNS Thammanna) பிரிவினரால், தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான 'சாம்பூ' (Shampoo) பக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கடற்படைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திங்கட்கிழமை (13) அன்று இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருந்த நிலையில், சட்டவிரோதமாகக் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சுமார் 5,386 சாம்பூ பக்கெட்டுகளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்ட சாம்பூ பக்கெட்டுகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

