நாட்டின் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலை (Heat Index) “…
நாட்டின் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலை (Heat Index) “எச்சரிக்கை” (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்புகளை மேற்கொள்ளாமல் இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

