யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் கோவில் வீதி (B203), 74.5மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் புனரமைக்கப்பட்டு, நேற்று (12.07.2026) உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 1.5கிலோமீட்டர் நீளமுடைய யாழ்ப…
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் கோவில் வீதி (B203), 74.5மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் புனரமைக்கப்பட்டு, நேற்று (12.07.2026) உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 1.5கிலோமீட்டர் நீளமுடைய யாழ்ப்பாணம் உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோவில் வீதியின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து நடைபெற்ற கையளிப்பு நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ விமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெ. றஜீவன் மற்றும் கௌரவ க. இளங்குமரன் ஆகியோர் இணைந்து பொதுமக்களிடம் வீதியை உத்தியோகபூர்வமாக கையளித்தனர். இந்நிகழ்வில் வைத்தியர் கணேஷ்வேல், பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. இளங்கீரன், பொறியியலாளர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்வீதியின் புனரமைப்பின் மூலம் உரும்பிராய் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதும் இலகுவானதுமான போக்குவரத்து சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_large.png)