ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்…
ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் "கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை" தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள்
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.
"ஈரானிய ஆக்கிரமிப்பைத்" தொடர்ந்து, தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் "பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்ததாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரே இரவில் தங்கள் வான்பரப்புக்குள் ஏவப்பட்ட ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக ஜோர்தான் இராணுவமும் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலில் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

