லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் நீரில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போன மாணவன் லிந்துலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளின் படி, நண்பர்க…

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் நீரில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன மாணவன் லிந்துலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின் படி, நண்பர்கள் சிலருடன் இணைந்து மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காக ஆக்ரா ஓயாவிற்கு சென்றிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மாணவன் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸ் கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மாணவனைத் தேடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.