களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்குச் சொந்தமான, பாணந்துறை நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் கூரையிலிருந்து பல ஓடுகளை அகற்றி சந்தேக நபர்கள் வீட்டிற்குள் ந…

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்குச் சொந்தமான, பாணந்துறை நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் கூரையிலிருந்து பல ஓடுகளை அகற்றி சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.பெறப்பட்ட முறைப்பாடு

இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மதிப்புமிக்க வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.திருட்டை நிகழ்த்திய பின்னர், சந்தேக நபர்கள் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.