கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (14) மாலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம பகுதிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு க…
கலேவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) மாலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம பகுதிக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர்
உயிரிழந்தவர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஆவார். இந்த பெண் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபகந்த ஓயாவில் நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.
சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

