சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வழங்கும் சலுகைக் கடன்கள், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுக் கொள்கை முடிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. வணிகக் கடன்களை விடக் குறைந்த வட்டியில் இவை கிடைத்தாலும், இதனுடன் விதிக்கப்படும் கட…

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வழங்கும் சலுகைக் கடன்கள், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டுக் கொள்கை முடிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

வணிகக் கடன்களை விடக் குறைந்த வட்டியில் இவை கிடைத்தாலும், இதனுடன் விதிக்கப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்த நிபந்தனைகள் ஆப்பிரிக்க நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.உலக வங்கி நிதியுதவி

சமீபத்தில் கென்யா பெற்ற 750 மில்லியன் டொலர் உலக வங்கி நிதியுதவி, இந்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ, "வெளிநாட்டினரிடம் கடன் வாங்கச் செல்லும்போது, அவர்கள் பணத்திற்குச் சம்மந்தமில்லாத பாலின சட்டங்கள், புதிய வரிச் சட்டங்கள் எனப் பல்வேறு நிபந்தனைகளை விதித்து நம்மை வற்புறுத்துகிறார்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் நிபந்தனைகளால் கென்யாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான வரி விதிப்புகளுக்கு எதிராக 2024 இல் நடந்த போராட்டங்களில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.நைஜீரியாவில் எரிபொருள் மானியம் இதேபோல், நைஜீரியாவில் எரிபொருள் மானியம் ரத்து செய்யப்பட்டதும், கானாவில் பொதுத்துறை வேலைவாய்ப்புகள் முடக்கப்பட்டதும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.

மறுபுறம், இந்த சீர்திருத்தங்கள் ஊழலைக் குறைக்கவும், நிதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கடன் வழங்கும் அமைப்புகள் வாதிடுகின்றன.இருப்பினும், 1980 மற்றும் 1990களில் கொண்டுவரப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்த திட்டங்கள் (SAPs) ஆப்பிரிக்காவின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை சீரழித்ததாகப் பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இறுதியில், சாதாரண குடிமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மருத்துவம் மற்றும் கல்விக்காகத் தங்கள் கைகளில் இருந்து பணம் செலவழிக்கும் அவலநிலையே இந்த நிபந்தனைக் கடன்களால் ஏற்படுகிறது.