2026 கால்பந்து உலகக்கிண்ணத்தின் பரபரப்பான “ரவுண்ட் ஆஃப் 16” சுற்றில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் நடுவர்கள் ஆர்ஜென்டினா அணிக்கு சாதகமாக, பாரபட்சமாக செயல்பட்டதாக எகிப்து அணி நிர்வாகமும், அதன் பயிற்சியாளர் ஹோசாம் ஹசன…

2026 கால்பந்து உலகக்கிண்ணத்தின் பரபரப்பான “ரவுண்ட் ஆஃப் 16” சுற்றில் எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் நடுவர்கள் ஆர்ஜென்டினா அணிக்கு சாதகமாக, பாரபட்சமாக செயல்பட்டதாக எகிப்து அணி நிர்வாகமும், அதன் பயிற்சியாளர் ஹோசாம் ஹசனும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

உலக சம்பியனான ஆர்ஜென்டினாவைத் தொடரச் செய்ய நடுவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் எகிப்து குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஃபிஃபா நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பியர்லூய்கி கொலினா மறுப்பு மேலும், ஃபிஃபா நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கையில்,

உலகக்கிண்ண நடுவர்களின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும், ஃபிஃபா தலைவராலோ அல்லது வேறு யாராலுமோ நடுவர்களின் முடிவுகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எகிப்து அணியின் முஸ்தபா ஜிகோ அடித்த கோல் “வார்” தொழில்நுட்பம் மூலம் மறுக்கப்பட்டதும், முகமது சாலாவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஃபவுல் மறுக்கப்பட்டதும் விதிகளின்படியே நடுவர்களால் துல்லியமாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்று கொலினா விளக்கமளித்துள்ளார்.

ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் நடுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விளையாட்டு உலகில் இதற்கு இடமில்லை என்றும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.