கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயும் வகையில் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர். மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக…
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயும் வகையில் ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர். மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தனர்.அபிவிருத்தி திட்டங்கள் மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் அவை தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.அத்துடன் மாநகர சபையின் செயல்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கான உதவிகளை வழங்குமாறும் இதன்போது மாநகரசபை முதல்வரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு தூதுவரிடமும் ஒவ்வொரு அபிவிருத்தி திட்டத்திற்கான முன்மொழிவு அறிக்கையும் வழங்கி வைக்கப்பட்டது.

