சமூக ஊடகங்களில் பகிரப்படும் 'உடனடி' மற்றும் 'அவசர' கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கையில், எவ்வித ஆவணங்களும் இன்றி 5000 முதல…
சமூக ஊடகங்களில் பகிரப்படும் 'உடனடி' மற்றும் 'அவசர' கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கையில்,
எவ்வித ஆவணங்களும் இன்றி 5000 முதல் 500000 ரூபா வரை கடன் தருவதாக விளம்பரங்கள் பகிரப்படுகின்றன.
இத்தகைய செயலிகளைப் பதிவிறக்கும் போது உங்கள் கைபேசியின் கட்டுப்பாடு மோசடியாளர்களிடம் சென்றுவிடுகிறது.திருடப்படும் தகவல்கள் இதன்மூலம் தனிப்பட்ட புகைப்படங்கள் குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்புகள் திருடப்படுகின்றன.
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கைபேசியில் உள்ள தொடர்புகளுக்கு மோசடியாளர்கள் அழைப்பு விடுத்து அவமானப்படுத்துகின்றனர்.
எனவே சந்தேகத்திற்கிடமான கடன் விளம்பரங்களை அணுகவோ, அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கவோ வேண்டாம்.
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை மட்டும் நாடவும்.இத்தகைய மோசடிகளை உடனே உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடளியுங்கள்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க, அறியப்படாத நபர்களிடமோ அல்லது செயலிகளிடமோ எவ்வித நிதித் தகவல்களையும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

