இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த 'அமெரிக்கக் கனவு' மெல்லக் குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் (E…

இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த 'அமெரிக்கக் கனவு' மெல்லக் குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்திய மாணவர்களுக்கான புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களின் கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவை விட ஐரோப்பிய நாடுகளில் கல்விச் செலவு 50% முதல் 80% வரை குறைவாக இருப்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும்.மாணவர்களுக்கான விசா

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கால அளவை அமெரிக்க அரசு அண்மையில் குறைத்துள்ளது.

இதனால், இந்தியாவிலிருந்து கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2023-ல் 9 இலட்சமாக இருந்த நிலையில், 2025-ல் 6 இலட்சமாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம், இந்திய மாணவர்கள் மற்றும் திறமையாளர்கள் விசா பெறுவதை எளிதாக்கியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் படிப்பை முடித்த பிறகு அங்கு வேலை செய்வதற்கான தெளிவான வழிகளையும் இது உருவாக்கியுள்ளது.

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியத் திறமையாளர்களை வரவேற்கிறது. கல்வி ஆலோசகர்களின் கணிப்புப்படி, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 60% முதல் 70% வரை உயரக்கூடும்.

பொறியியல் படிப்புக்கு ஜெர்மனி, சிறந்த வாழ்க்கை முறைக்கு நெதர்லாந்து, குறைந்த கட்டண ஆராய்ச்சிப் படிப்புகளுக்குப் போர்த்துக்கல் மற்றும் முகாமைத்துவ படிப்புகளுக்குப் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.