மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - நல்லத்தண்ணி பிரதான வீதியில், ப்ரௌன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து, போதைப்பொருட்களுடன் இருவரை மஸ்கெலியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (14) மதியம் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பகுதியைச் ச…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா - நல்லத்தண்ணி பிரதான வீதியில், ப்ரௌன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து, போதைப்பொருட்களுடன் இருவரை மஸ்கெலியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (14) மதியம் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும் ஆவர்.

இவர்களிடமிருந்து 3,290 மில்லிகிரேம் 'ஐஸ்' (Ice) போதைப்பொருளும், 360 மில்லிகிரேம் 'ஹெரோயின்' (Heroin) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நீண்டகாலமாக இப்பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்" என்றார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்றத்தில் புதன்கிழமை (15) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.