கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். கைப்பற்றப…

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் இதன்போது அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார். இவர் நீண்டகாலமாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.