பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஊடகச் செயலாளராகக் கடமையாற்றிய அஜித் குமார், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்த…
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஊடகச் செயலாளராகக் கடமையாற்றிய அஜித் குமார், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், பிரதி அமைச்சருடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

