மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதி…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் 2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அந்த நாட்டுப் பிணைமுறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டிருந்தது. இதற்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தரப்பினரால் இந்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையில், உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சி. ராகல ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த HCB 271/24 மற்றும் HCB 33/24 ஆகிய வழக்குகளில் உள்ள குற்றச்சாட்டுக்களும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளும் சமமானவை என பிரதிவாதி தரப்பு மன்றில் தெரிவித்ததுடன், அந்த வழக்கு நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அதன் பணிப்பாளர் நாயகத்தினால் 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் நிர்வாகக் கட்டமைப்புக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.நீதிமன்ற உத்தரவு மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு , இந்தச் சட்டத்தின் மூலம் தற்போதுள்ள மூலச் சட்டத்தின்கீழ் எந்தவித உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது நடைமுறைச் சட்டமே எனவும் தெரிவித்திருந்தது.
மேலும், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்படும் தீர்ப்பினால், பாதிக்கப்படும் தரப்பு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனடிப்படையில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளில் எந்தவித அடிப்படையும் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கின் முழுமையான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 184 கோடிக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

