ஜோர்தானின் கடற்கரை நகரமான அகாபாவில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று ஜோர்தான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு ஊடகங்கள் வெளிய…

ஜோர்தானின் கடற்கரை நகரமான அகாபாவில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று ஜோர்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தான் அரசு விளக்கம் அகாபா விமான நிலையமும் துறைமுகமும் வழக்கம் போன்று இயங்கி வருவதாகவும், அந்த இரு இடங்களில் இருந்து வெளியேறுமாறும் ஜோர்தான் அதிகாரிகள் எந்தவொரு "வெளியேற்ற உத்தரவையும் பிறப்பிக்கவில்லை" என அரசு செய்தி தொடர்பாளர் முகமது அல்-மொமானி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில மணிநேரங்களில் சம்பந்தப்பட்ட ஜோர்தான் அதிகாரிகளால் எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அம்மானில் உள்ள அமெரிக்க தூதரகம், "குறிப்பிட்ட மற்றும் நம்பகமான அச்சுறுத்தல்" இருப்பதாகக் கூறி, அமெரிக்க குடிமக்கள் அந்த விமான நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளிலிருந்து தள்ளி இருக்குமாறு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.