ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் பிரஸ் டிவி, இந்த இறுதி ஊர்வலத்தை “உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதி ஊர்வலம்” என வர்ணித்துள்ளது. ஆறு நாட்கள் நடைபெற்ற இ…
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் பிரஸ் டிவி, இந்த இறுதி ஊர்வலத்தை “உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய இறுதி ஊர்வலம்” என வர்ணித்துள்ளது.
ஆறு நாட்கள் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வுகள் தெஹ்ரான், கோம், நஜாஃப், கர்பலா மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ பொதுமக்கள் அஞ்சலி நிகழ்வுகள், தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா மத வளாகத்தில் கமெனியின் சவப்பெட்டி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் மூலம் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிகழ்வில், காசாவைச் சேர்ந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புகளின் பிரதிநிதிகள், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹூதி இயக்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய தெஹ்ரானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த அலி கமெனி, பின்னர் ஈரானின் புனித ஷியா வழிபாட்டுத் தலங்களில் ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இறுதிச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் மக்கள் எண்ணிக்கை குறித்து சுயாதீன ஆதாரங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

