அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஜோர்தானில் அமைந்துள்ள இளவரசர் ஹசன் விமானப்படைத் தள…
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஜோர்தானில் அமைந்துள்ள இளவரசர் ஹசன் விமானப்படைத் தளத்திலுள்ள எரிபொருள் சேமிப்பு வசதிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தையும் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் புரட்சிகர காவல்படை கூறியுள்ளது. இந்தத் தளம் அமெரிக்காவின் பிரதான கடற்படைத் தலைமையகமாக இல்லாவிட்டாலும், அமெரிக்க இராணுவ விமான மற்றும் தளவாட நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களை அடுத்து பஹ்ரைனின் பல பகுதிகளில் அவசரகால எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனுடன், குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமடைந்துள்ளதுடன், பிராந்தியத்தில் நிலவும் இராணுவ மோதல் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

