இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் 'ஜிந்த்' பகுதியிலிருந்து 'சோனிபட்' வரை சுமார் 89 கிலோமீட்டர் தூ…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் 'ஜிந்த்' பகுதியிலிருந்து 'சோனிபட்' வரை சுமார் 89 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த அதிநவீன ரயில் சேவை இயக்கப்படுகிறது. முற்றிலும் தூய்மையான ஹைட்ரஜன்

வழக்கமான ரயில்களைப் போல மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரம் பெறாமல், இந்த ரயில் முற்றிலும் தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்துகிறது. 1200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசையால் இந்த ரயில் இயக்கப்படுவது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், 10 பெட்டிகளுடன் சுமார் 2,600 பயணிகளை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பை பொறுத்தவரை, ஹைட்ரஜன் கசிவு, அதிக வெப்பம் மற்றும் புகையை முன்கூட்டியே கண்டறியும் அதிநவீன சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்பதால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதுகாக்கப்படுவதுடன், ரயிலை இயக்குவதற்கான செலவும் பெருமளவில் குறைகிறது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய வல்லரசு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்த சூழல் நட்பு தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி இயக்கும் ஆறாவது நாடாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.