அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும், பாலங்கள் மற்றும் மின்…
அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல்களும், "கொடிய குற்றங்களைச் செய்வதற்கான அமெரிக்க ஆளும் குழுவின் குற்றவியல் நோக்கத்தை" காட்டுவதாக அவர் குற்றம் சுதம்தியுள்ளார்.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார். 1949-ஆம் ஆண்டின் நான்கு ஜெனிவா ஒப்பந்தங்கள் உட்பட, சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின்படி இவை "பாரதூரமான சர்வதேச குற்றங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். "இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை விசாரித்து தண்டிக்க அனைத்து அரசாங்கங்களுக்கும் கடமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் அர்த்தமற்ற பேச்சுக்கள் மற்றும் கொடூரமான மிரட்டல்களை அவர் சாடியுள்ளார். ஈரானிய மக்கள் தங்களது சுதந்திரம், நியாயமான உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பதன் காரணமாகவே இந்த விரோதப் போக்கு காட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இறுதியாக, இதற்கு காரணமானவர்கள் "தங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகக் கூறி, சட்டரீதியான பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது" எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

