இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ள…

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகைகளை மேலும் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமெரிக்க ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் இலங்கை மக்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தான் தூதுவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நாட்டிற்குத் திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் தாய்நாடு திரும்பிய பின்னரும் தாய்நாட்டிற்காகவே பணியாற்றுவதாகவும் அந்தச் சேவை ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தாம் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்துகொள்ள எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்துடன் தான் மிகவும் சுமுகமாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்ட மஹிந்த சமரசிங்க, தூதுவர் பதவியில் மேலும் நீடிக்குமாறு அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகக் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், தான் தூதுவர் பதவியை வகித்த காலப்பகுதியில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நாட்டுக்காக அதிகபட்ச சேவையை ஆற்ற முயற்சித்ததாகவும் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.