அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து, குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி…

அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து, குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்தவர் எனஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் குறித்துப் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்