அம்பாறை மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் நேற்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைக்…

அம்பாறை மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி தெரிவித்தார்.அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் நேற்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ,குறித்த பகுதியில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும், தற்போது 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு களஞ்சியசாலை மாத்திரமே நெல் கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.நெல் களஞ்சியசாலைகள் வரவிருக்கும் நாட்களில் விவசாயிகளின் அறுவடை நிலவரங்களுக்கு ஏற்ப, அம்பாறை மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும்.இதுவரை 18 தனியார் களஞ்சியசாலைகள் நெல் சேமிப்புத் தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஏனைய களஞ்சியசாலைகளில் உள்ள பழைய இருப்புக்களை அகற்றுவதற்காக ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) கோரப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் நீக்கப்படும் என்றும் கூறினார்.