அம்பாறை – மருதமுனை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, வேலைக்காக…

அம்பாறை – மருதமுனை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞரின் வாகனம், வீதியில் ஊற்றப்பட்டு தேங்கியிருந்த நீரின் காரணமாக சறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஜெயராமன் ஜெகதீஸ்வரன் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், திருமணமான நிலையில் பாண்டியிருப்பில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் ஊற்றப்பட்டு தேங்கியிருந்த நீரால் மோட்டார் சைக்கிள் சறுக்கியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.